Ilango Bharathy / 2023 மார்ச் 07 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது 8 வயதில் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக பிரபல நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக நிர்வாகியுமான குஷ்பு தெரித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் "ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
எனது தாயார் மிகவும் மோசமான திருமண வாழ்ககையை அனுபவித்துள்ளார். எனது தந்தை தன் மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன். அவர் எனக்கு பாலியல் தொல்லை தொடங்கியபோது எனக்கு 8 வயதுதான். 15 வயதில் அவருக்கு எதிராகப் பேசும் தைரியம் எனக்கு இருந்தது.

ஆனால் குடும்பத்தினர் என்ன சொல்வார்களோ என்ற பயம் இருந்ததால், பல ஆண்டுகளாக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் அம்மா என்னை நம்பவில்லை. ஆனால் 15 வயதில் அது போதும் என்று நினைத்து அவருக்கு எதிராக பேச ஆரம்பித்தேன். எனக்கு அப்போது 16 வயது கூட ஆகவில்லை. எங்களை நிர்கதியாக விட்டு சென்றார். அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் என்னை சிறுவயதிலேயே மன உறுதியை படைத்தவளாக மாற்றியது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
14 minute ago
29 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
42 minute ago
1 hours ago