2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

விஜய் படத்தில் ’விக்ரம்’ நடிகை

J.A. George   / 2023 ஜூன் 06 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் மற்றும் பகத் பாசில் உடன் ஒவ்வொரு காட்சியில் நடித்த நடிகை மாயா கிருஷ்ணன் தற்போது ’லியோ’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மாயா கிருஷ்ணன் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தாலும் ’விக்ரம்’ படம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் பெற்று தந்தது.

’விக்ரம்’ படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்திருந்தாலும் அந்த கேரக்டரை லோகேஷ் கனகராஜ் சிறப்பாக வடிவமைத்திருந்தார். அதுதான் அவரது பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்  லோகேஷ் இயக்கி வரும் ’லியோ’ படத்திலும் மாயா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ‘லியோ’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த லோகேஷ்க்கு எனது நன்றி என்றும் தளபதி விஜய் எப்போதும் தனக்கு ஸ்பெஷல் என்றும் பதிவு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .