2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

ஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்

Ilango Bharathy   / 2021 ஜூன் 10 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தமிழ் திரையுலகின் முன்னணித்  தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.பி செளத்ரி மீது, நடிகர் விஷால், பொலிஸ் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரில்”தயாரிப்பாளர்  ஆர்.பி செளத்ரியிடம் தான் கடன் வாங்கியதாகவும் அக் கடனை திருப்பி செலுத்திய பின்னரும் தான் கடனுக்காக கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தை அவர் திரும்பிவரவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி செளத்ரி மகனும் நடிகருமான ஜீவாவும் விஷாலும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் தற்போது ஆர்.பி சவுத்ரி மீது விஷால் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .