2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அரசியலில் களமிறங்கும் தனுஷ்

Administrator   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்க போகின்றாராம். என்ன ஆச்சரியமாக உள்ளதா? நிஜத்தில் இல்லைங்க திரைப்படத்தில்.
அதாவது தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் இளம் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

தனுஷ் நடிப்பில் தற்போது தங்கமகன் திரைப்படம் தயாராகியுள்ளதுடன் 18ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் தனுஷுடன் சமந்தா, எமி ஜெக்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். தனுஷ் காதலிக்கும் பெண்ணாக எமி ஜெக்ஷனும் திருமணம் முடிக்கும் பெண்ணாக சமந்தாவும் நடித்துள்ளனர்.

தங்கமகனை அடுத்து, இயக்குநர் துரை செந்தில் இயக்கத்தில்தான் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்துக்கு கொடி என பெயரிடப்பட்டுள்ளது.  தனுஷூக்கு ஜோடியாக திரிஷா, ஷாம்லி ஆகியோர் நடிக்கின்றனர். 

இந்தத் திரைப்படத்தில் இளம் அரசியல்வாதி வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

சிவகார்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிசட்டை ஆகிய  வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் துரை செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X