2025 ஜூலை 02, புதன்கிழமை

16ஆம் திகதி படபிடிப்புகள் ரத்து

George   / 2016 மே 13 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டமன்ற தேர்தல் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதால் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 16ஆம் வாக்குப் பதிவின்போது வாக்களித்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்ற நடிகர்-நடிகைகள் தயாராகிறார்கள்.

எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 2.0 திரைப்படத்தில் நடித்துக்கொண்டுள்ள ரஜினிகாந்த், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களிக்கவுள்ளார்.

கமல்ஹாசன், சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்ல தயாராவதுடன் வாக்களிப்பு தினத்தில் சென்னையில் இருந்தால் ஓட்டுப்போடுவேன் என்று கூறியுள்ளார்.

விஜய் தனது 60ஆவது திரைப்படத்தில் பரதன் இயக்கத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவர் திங்கட்கிழமை வாக்களிக்க வருகிறார்.

முழங்கால் வலிக்கு சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வரும்அஜீத்;, அவரும் ஓட்டுப்போடுகிறார். விக்ரமும் ஓட்டுப்போட வருகிறார்.

நடிகர் விஷால் கத்திச்சண்டை படப்பிடிப்பில் இருக்கிறார். கண்டிப்பாக ஓட்டுப்போடுவேன் என்று கூறியுள்ளார்.

காஷ்மோரா படப்பிடிப்பில் இருக்கும் கார்த்தி வாக்களிக்க வருகிறார். நடிகர் சூர்யா, வாக்குப்பதிவு நாளில் சென்னையில் இல்லை. ஒருமாத ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஜெயம்ரவி, தனுஷ், சிம்பு மற்றும் திரிஷா உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் பலரும் வாக்களிக்கவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .