George / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீயான் விக்ரம் முதன்முதலில் இரண்டு வித்தியாசமான வேடங்களிலும் நயன்தாராவுடன் முதன்முதலில் இணைந்தும் நடித்த 'இருமுகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் அண்மையில் முடிவடைந்தது.
இந்நிலையில் இந்த திரைப்படம் தணிக்கை குழுவுக்கு நேற்று திங்கட்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
துணிக்கைக் குழு அதிகாரிகள் பார்த்து 'யூஏ' என சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளதால் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும் இந்த திரைப்படத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு காரணமாக வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளதால் செப்டம்பர் 8ஆம் திகதி திரைப்படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை உறுதிசெய்யும் வகையில் இந்திய நாளிதழ்களில் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியுடன் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 minute ago
16 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
18 minute ago