2025 மே 16, வெள்ளிக்கிழமை

'எஸ் 3' தெலுங்கு திரைப்படமாம்: அதிர்ச்சித் தகவல்

George   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா மற்றும் பலர் நடிக்க பரபரப்பாக படமாகி வரும் 'எஸ் 3' தெலுங்கு திரைப்படம் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

'சிங்கம் 3' என ஏன் பெயரை வைக்கவில்லை என்று திரைப்படத்துக்கான பெயரை 'எஸ் 3' என அறிவிக்கும் போதே எழுந்தது. 
சூர்யாவுக்கு தெலுங்கு தேசத்திலும் வரவேற்பு இருப்பதால் திரைப்படத்தைத் தமிழ், தெலுங்கு என நேரடியாக உருவாக்குவது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் திட்டமிட்டார்களாம். 

அதன்படியே திரைப்படத்தின் படிப்பிடிப்பை பெரும்பாலும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலேயே நடத்தி, அங்கு படப்பிடிப்பு நடைபெறுவதைப் பற்றிய தகவலையும் தெலுங்கு ஊடகங்களில் தவறாமல் பரப்பி வருகிறார்களாம்.

தமிழ்நாட்டில் அது பற்றிய கேள்வி வந்துவிடக் கூடாது என்பதற்காக திரைப்படத்தில் சூர்யா பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்றுவது ஆந்திராவில்தான் என்று கதையில் ஒரு காரணத்தை வைத்துவிட்டார்களாம். 

முதல் பாகத்தில் தூத்துக்குடி பக்கத்தில் உள்ள நல்லூர் என்ற சிறிய ஊரில் பொலிஸ் அதிகாரியாக இருந்து, பின்னர் சென்னைக்கு பதவி உயர்வு பெற்று வருவார். 

இரண்டாம் பாகத்தில் தூத்துக்குடியில் அன்டர்கவர் பொலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது மூன்றாம் பாகத்தில் ஆந்திர பொலிஸ் அதிகாரியாக சூர்யா நியமிக்கப்படுகிறாராம்.

திரைப்படத்தைப் பார்க்கும் போது தெலுங்கு வாடை அடிக்காமல் இருக்கவும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம். ஆனால், ஹரி இயக்கிய முதல் இரண்டு சிங்கம் திரைப்படங்களுமே தமிழிலேயே தெலுங்கு வாடை அடித்த திரைப்படமாகத்தானே இருந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .