2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நடிகர் வினோத் கண்ணா காலமானார்

Gavitha   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மிகவும் பிரபல்யமான பொலிவுட் நடிகர்களில் ஒருவரும் அரசியல்வாதியுமான, வினோத் கண்ணா தனது 70ஆவது வயதில் காலமானார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர் இந்த மாத ஆரம்பத்தில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானார்.

இவர், சுமார் 100க்கும் மேற்பட்ட பொலிவுட் படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் இந்திய நாடாளுமன்றத்தில் 4 முறை அமைச்சராக பதவி வகித்துள்ளதுடன் வெளிவிவகார பிரதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

தனது தொழிலை 1968மஆம் ஆண்டு தொடங்கியதுடன்,1970-1980களில், பல பொலிவுட் வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X