Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 12 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இலவசப் பரிசுகளை வழங்குவது என்ற 80களில் செயல்படுத்தப்பட்ட யோசனையை தற்போது 24 திரைப்படத்துக்காக செய்ய முன் வந்திருக்கிறார்கள்.
அதாவது திரைப்படம் பார்க்க வருவோருக்கு வாட்ச் ( கடிகாரம்) பரிசளிக்கப்படும் என்று தமிழகத்தின் திரையரங்குகளில் அறிவித்துள்ளனர்.
இந்தத் திரைப்படமும் சரியாக வசூலிக்காமல் போனால் சூர்யாவின் மார்க்கெட் தமிழில் நிரந்தரமாக ஆட்டம் கண்டுவிடும். எனவே, எதைச் செய்தாவது திரைப்படத்தை ஓட்டும்படி ஆலோசனை சொல்லியிருக்கிறார்களாம்.
விடுமுறை காலம் என்பதாலும், தெறி திரைப்படத்தை குழந்தைகள் அதிகம் பேர் வந்து பார்த்ததாலும அவர்களைக் கவர்ந்தால், எப்படியும் தங்களது அப்ப, அம்மாவிடம் படத்துக்கு கூட்டிப் போக வைத்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில்தான் வாட்ச் இலவசம் என்ற திட்டம் அமுல்படுத்தப்படுகிறதாம்.
நம்பரில் தன் படப் பெயரை வைத்தால் படம் ஓடும் என்ற எண்ணத்தில் 'பசங்க 2, 36 வயதினிலேயே, 24' எனப் படங்களைத் தயாரித்த சூர்யாவுக்கு தற்போது நேரம் சரியில்லை போலிருக்கிறது என கோலிவுட்டில் கிண்டல் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .