George / 2016 ஜூன் 21 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டில் 17ஆம் திகதி வெளியான திரைப்படங்களுடன் சேர்த்து இதுவரை 101 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
24ஆம் திகதி அம்மா கணக்கு, மெட்ரோ, ராஜா மந்திரி ஆகிய திரைப்படங்கள் வெளிவர உள்ளன. இந்த திரைப்படங்களையும் சேர்த்தால் 2016ஆம் ஆண்டின் அரையாண்டில் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை 104ஐத் தொட்டுவிடும்.
இந்த ஆறு மாத காலத்தில் இவ்வளவு திரைப்படங்கள் வெளிவந்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அதிகமான திரைப்படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
100 படங்கள் என்பது எண்ணிக்கையில் தாண்டினாலும் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் படங்கள் உள்ளன. ஒரு மாதத்திற்கு இரண்டு படங்கள் வெற்றி பெறுவதே பெரிய விஷயமாக உள்ளது.
இந்த ஆறு மாதத்தில் 'ரஜினி முருகன், அரண்மனை 2, இறுதிச் சுற்று, விசாரணை, சேதுபதி, பிச்சைக்காரன், காதலும் கடந்து போகும், தோழா, தெறி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' ஆகிய திரைப்படங்கள்தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago