Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 07 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் ராகுல்ப்ரீத் சிங். தற்போது விஷாலுடன் துப்பறிவாளன் திரைப்படத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராகுல்ப்ரீத்சிங், சில திரைப்படங்களில் லிப்லொக் காட்சிகளிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
ஆனால், அவர் உதட்டு முத்தக்கட்சிகளில் நடித்த பிறகு, அவரைத்தேடிச்சென்ற எல்லா திரைப்படங்களிலுமே முத்தக்காட்சியை இணைத்தே கதை சொன்னார்களாம். அதில் சில திரைப்படங்களில் வேண்டுமென்றே அந்த காட்சி கதையில் திணிக்கப்பட்டிருந்ததாம்.
அதையடுத்து, 'முத்தக்காட்சியில் நடிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த காட்சி கதைக்கு அவசியப்பட்டதாக இருக்க வேண்டும். அவசியமே இல்லாதபட்சத்தில் அந்த மாதிரியான காட்சிகளில் நான் நடிக்கமாட்டேன்'என்று கூறி வருகிறாராம்.
அதோடு தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் கதைகளில், இந்த திரைப்படத்தில் எதற்காக முத்தக்காட்சியை வைத்தீர்கள் என்று இயக்குநர்களிடமே கேள்வி கேட்கிறாராம் ராகுல்ப்ரீத்சிங்.
இதனால், ராகுல்ப்ரீத்சிங்கின் உதட்டு முத்தக்காட்சியை வைத்தே திரைப்படத்தை ஓட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சில இயக்குநர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
27 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago