Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2016 ஜூன் 21 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுல்தான் திரைப்படம் தொடர்பாக சல்மான் கான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான்கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள திரைப்படம் சுல்தான்.
சல்மான், மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார். திரைப்படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் நடந்து வருகிறன.
இந்நிலையில் சல்மான், இத்திரைப்படத்துக்காக தான் கஷ்டப்பட்ட விதத்தை கூறியது சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
அப்படி என்ன சொன்னார் சல்மான்?
இத்திரைப்படம் மல்யுத்த வீரர் பற்றிய கதை என்பதால் கடுமையாக உழைத்தாராம் சல்மான். குறிப்பாக வெயிட் லிப்ட்டிங் உள்ளிட்ட பல உடல் உழைப்புகளை கொடுத்தாராம்.
ஷூட்டிங்கை முடித்து வரும் போது, ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் எந்த நிலையில் இருப்பாரா அதேப்போன்று தான் உணர்ந்ததாகவும், தன்னால் நேராக கூட நிற்க முடியவில்லை என்றும் சல்மான் கூறியுள்ளார்.
சல்மானின் இந்த பேச்சுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் சல்மானை நிறையபேர் வசைபாடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி சல்மான், தன்னுடைய இந்த பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெண்கள் அமைப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago