2025 மே 16, வெள்ளிக்கிழமை

14 வருடங்களுக்குப் பின்னர் அஜீத் - முருகதாஸ் கூட்டணி

George   / 2016 ஏப்ரல் 18 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜீத்தின் தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் முருகதாஸ். அஜீத்துக்கு தீனா திரைப்படத்தில் இருந்துதான் தல என்ற பெயர் வந்தது. 

தீனா திரைப்படம் அஜீத்துக்கு திருப்புமுனையாக அமைந்ததுடன் அதன் பிறகு இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இருவரும் அவரவர் திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் இதுவரை இணைவதற்கு முடியாமல் போனது.
இந்நிலையில், சுமார் 15 வருடங்களுக்குப்பிறகு இருவரும் தற்போது இணைந்து பணியாற்றவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அஜீத்தின் 58ஆவது திரைப்படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் இயக்குநர் சிவாவின் அஜீத் ஹெட்ரிக் திரைப்படத்தையடுத்து, அஜீத் -  முருகதாஸ் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தாலும், இயக்குநர் விஷ்ணுவர்தனும் அஜீத்தை இயக்குவதாக ஏற்கெனவே செய்தி வெளியாகியுள்ளதால் விஷ்ணுவர்தனின் திரைப்படத்துக்கு பின்னரா, முன்னரா முருகதாஸ் திரைப்படம் ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .