2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

'அது வேண்டாம்.. இதை போடுங்க...' ஐஸ்வர்யா அன்பு வேண்டுகோள்

George   / 2016 ஜூலை 25 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்தார்த்தின் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற திரைப்படங்களில் தோழியாக நடித்த ஐஸ்வர்யாமேனன், இப்போது கழுகு கிருஷ்ணா நடிக்கும் வீரா திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

புதிய திரைப்படங்களில் நடிக்கவும் தீவிர முயற்சி எடுத்து வரும் அவர், தன்னைப்பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகளோடு தனது ஆரம்ப கால புகைப்படங்கள் வெளியாகி வருவதால் அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்ததை விடவும் இப்போது அவர் தனது உடல் அழகை மெருகேற்றியிருக்கிறாராம். அதனால் இந்த நேரத்தில் பழைய புகைப்படங்களைப்பார்த்து தனக்கு வரவேண்டிய திரைப்படங்கள் திரும்பிச்சென்று விடும் என்பதால் அதிர்ச்சியடைந்துள்ளார் ஐஸ்வர்யாமேனன்.

இதனால், தனக்கு தெரிந்த ஊடக நண்பர்களை தொடர்பு கொண்டு, தற்போது தான் எடுத்துள்ள புதிய புகைப்படங்களை அனுப்பி வைத்து, இனிமேல் இந்த புகைப்படங்களை மட்டுமே வெளியிடுங்கள் என்ற அன்பு வேண்டுகோள் விடுத்து வருகிறார் ஐஸ்வர்யாமேனன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .