2025 மே 14, புதன்கிழமை

'அதெல்லாம் சரிவராது..நடிச்சுதான் ஆகணும்' நிவேதாவுக்கு எச்சரிக்கை

George   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாபநாசம் திரைப்படத்தில் கமலின் மூத்த மகளாக நடித்த நிவேதா தோமஸ் மீது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் அண்மையில் நடித்த நிவேதா தோமஸ், அதற்கு முன்னதாக ஜூலியட் என்ற திரைப்படத்தில் நடிக்க முற்பணம் வாங்கியிருக்கிறார்.

ஆனால், அந்த திரைப்படத்தில் நடிக்க அழைத்தபோது அவர் மறுத்துவிட்டாராம்.

அதெல்லாம் சரிவராது அவர் நடித்துத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, நிவேதா மீது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அப்படி ஜூலியட் திரைப்படத்தில் நிவேதா நடிக்க மறுத்தால் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிவேதாவை அழைத்த தயாரிப்பாளர் சங்கம், எச்சரித்துள்ளதையடுத்து, மீண்டும் ஜூலியட் திரைப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் நிவேதா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .