2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

'அரைகுறை ஆடையில் நடிக்க சொல்கின்றனர்'

George   / 2016 ஜூன் 13 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்இ ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை சாம் என்டன் இயக்கி உள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகை ஆனந்தி அளித்த பேட்டி வருமாறுஇ 'பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது நடிகையாக வேண்டும் என்று ஆர்வம் இல்லை. எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். கயல் திரைப்படத்தில் இயக்குநர் பிரபு சொலமன் என்னை நடிக்க வைத்து பிரபலபடுத்தினார். 

அவர்தான் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். திரிஷா இல்லன்னா நயன்தாராஇ பொறியாளன்இ சண்டி வீரன் உள்பட பல திரைப்படங்களில் நடித்து விட்டேன். தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறேன்.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைப்படத்தில் தாதாவின் மகளாக வருகிறேன். இந்த திரைப்படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் எனக்கு சிபாரிசு செய்தார் என்பதில் உண்மை இல்லை. நல்ல கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் எனக்கு அமைந்து இருக்கிறது. படப்பிடிப்பில் என்னிடம் எல்லோரும் அன்பாக பழகினார்கள். அக்கறையோடு பார்த்துக்கொண்டனர்.

ஏற்கெனவே நான் நடித்த சில திரைப்படங்களில் எனக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டன. இயக்குநர் ஆரம்பத்தில் என்னிடம் கதை சொன்னதை மீறி படப்பிடிப்பில் கவர்ச்சியாக நடிக்கும்படி வற்புறுத்தப்பட்டேன். 

அரைகுறை ஆடையை கொடுத்தும் உடுத்த சொன்னார்கள். என் உடல்வாகுக்கு கவர்ச்சி எடுபடாது. கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சினிமாவில் அறிமுகமானபோதே முடிவும் செய்து விட்டேன்.

எனவே கவர்ச்சி ஆடைகளை உடுத்த மாட்டேன் என்று மறுத்து விட்டேன். மீறி என்னை வற்புறுத்தினால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விடுவேன் என்றும் மிரட்டினேன். இப்போதெல்லாம் கதை கேட்கும்போதே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குட்டைப்பாவாடை அணிய மாட்டேன் என்றெல்லாம் இயக்குநரிடம் உறுதியாக சொல்லி விட்டுத்தான் நடிக்க செல்கிறேன்' என ஆனந்தி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X