Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ஹன்சிகாவுக்கு நாளை செவ்வாய்க்கிழமை(09) பிறந்தநாள். வழக்கம்போல இந்த முறையும் தனது வளர்ப்பு குழந்தைகளுடன் தான் பிறந்தநாளை கொண்டாடப்போகிறார்.
இந்நிலையில், தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களின் கேள்விக்கு தனது யூ-டியூப் பக்கத்தில் பதில் அளிக்க விரும்புவதாக அறிவித்தார்.
ரசிகர்கள் கேட்கும் கேள்விகளிலிருந்து 25 கேள்விகளுக்கு பதில் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
அறிவித்த முதல் நாளே 8ஆயிரம் கேள்விகளை கேட்டு ஹன்சிகாவை திணறடித்து விட்டார்கள் ரசிகர்கள். இப்போது 10 ஆயிரம் கேள்விகளுக்கு மேல் வந்துள்ளதாம்.
உங்கள் அழகின் ரகசியம் என்ன?, புன்னகையின் மர்மம் என்ன?, அழகை மட்டும் காட்டிச் செல்கிறீர்களே எப்போது நடிப்பீர்கள்? ரஜினியுடன் நடிப்பீர்களா?, சிம்புவுடன் மீண்டும் சேர்வீர்களா?, தமிழ் நாட்டு குழந்தைகளை தத்தெடுப்பீர்களா?, காதல் திருமணமா - அப்பா அம்மா பார்க்கும் திருமணமா?, யாரையாது காதலிக்கின்றீர்களா?, உங்கள் காதலன் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? போன்ற கேள்விகள்தான் அதிகமாக வந்திருக்கிறதாம்.
இதிலிருந்து 25 கேள்விகளை எப்படி தேர்வு செய்வது என்று திணறி வருகிறாராம் ஹன்சிகா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago