Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மே 02 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படத்தின் டீசர் யூடியூப் மற்றும் இணையத்தளங்களில் தெறித்துக் கொண்டிருக்கிறது.
நேற்று வெளியான கபாலி டீசரைத் திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் பாராட்டியுள்ளார்கள்.
ராதிகா ஆப்தே: சிறந்த மனிதர்... ரஜினிகாந்த்... சிறந்த டீசர்.. கபாலி...
எஸ்.எஸ்.ராஜமௌலி : இதுதான் ஸ்டைல், இதுதான் ரஜினி, இதுதான் தலைவா...
ராம் கோபால் வர்மா : ரஜினிகாந்த் ஏன் ரஜினிகாந்த் ஆக இருக்கிறார் என்பதற்குக் காரணமிருக்கிறது. ரஜினியைத் தவிர வேறு எந்த சூப்பர் ஸ்டாரும் திரையில் இப்படி ஒரு அதிர்வை ஏற்படுத்த முடியாது. முதல்நாளில் இந்தப் திரைப்படத்தை நான்கு முறை பார்க்க விரும்புகிறேன். கபாலி, பாகுபலிக்குப் பிதா போல இருக்கிறார், ஒரே ஒரு ரஜினிகாந்த் மட்டுமே.
தனுஷ் : நெருப்புடா... நெருங்குடா... தலைவா... நன்றி பா.ரஞ்சித், மகிழ்ச்சி...
சிவகார்த்திகேயன் : தலைவர் வெறித்தனம்.. ரஞ்சித் சகோதரா... மகிழ்ச்சியின் உச்சம்.. உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நன்றி...
நானி - தெலுங்கு நடிகர் : டிக்ஷனரி கிரேஸ் என்பதற்கான அர்த்தமாகச் சொல்வது என்னவென்றால், ஒரு வடிவம், ஒரு நடவடிக்கை, ஒரு இயக்கம், ஒரு முறை அதன் அழகை நேர்த்தியுடன் வெளிப்படுத்துவது என்று சொல்கிறது. நான் அதை இது தான் (ரஜினியின் கபாலி டீசர் புகைப்படம்) எனச் சொல்வேன்.
ராதிகா சரத்குமார் : ஆசம்...எப்போதும் போல அசத்தல்...வாவ்...!
குஷ்பு : மற்றுமொரு சூப்பர் ஸ்டார் இல்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ரஜினிகாந்த், எங்களுக்குள் இருக்கும் நெருப்பை நீங்கள்தான் மூட்டுகிறீர்கள். அதை நீங்கள்தான் வெளிப்படுத்துகிறீர்கள்.
கார்த்திக் சுப்புராஜ் : அந்தக் கண்கள்... அந்த சிரிப்பு... அந்த குரல்... அந்த நடை... ஐயோ.. தலைவா.. நன்றி.. ரஞ்சித் மற்றும் குழுவினர்.
இயக்குனர் ஷங்கர் இந்த டீசரை ரஜினிகாந்துடன் சேர்ந்தே பார்த்திருந்தாலும், அது சம்பந்தமான புகைப்படங்கள் நேற்று வெளியானாலும் அவர் இதுவரை கபாலி டீசரைப் பற்றி எதுவும் கருத்து சொல்லவில்லை.
ரஜினிகாந்த்துடன் ஒரு திரைப்படத்திலாவது நடிக்க வேண்டும் என சொல்லும் சில முன்னணி இளம் நடிகைகள் கூட கபாலி டீசர் என்ற ஒன்று நேற்று வெளியாகாதது போலவே இருக்கிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 May 2025