2025 மே 14, புதன்கிழமை

'சாமி 2' தொடர்ச்சி அல்ல... முன்கதை!

George   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் (2003)தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படம் சாமி இயக்குநர் ஹரியின் இரண்டாவது திரைப்படமாகவும் சேது, காசி, தில் எனத் தெரிவுசெய்து  நடித்துவந்த சீயான் விக்ரமின் முக்கியமான திரைப்படமாகவும் விக்ரம், ஹரி ஆகிய  இருவரின் திரைவாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்திருந்தது.

 'ஒருச்சாமி.. ரெண்டுச்சாமி...' என விக்ரம் அறிமுகமாகும் காட்சியைப் பார்த்து பிரமித்துப்போன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந், 'எனக்கு இதுபோல ஒரு அறிமுகக்காட்சி அமையவில்லையே' என சாமி திரைப்படத்தின் வெற்றிவிழாவில் ஆதங்கப்பட்டார்.

இன்றும் தொலைக்காட்சியில் „சாமி... திரைப்படம் மாதத்துக்கு இரண்டு முறையாவது ஒளிபரப்பாகிக்கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இதுவரை இரண்டாம் பாகம் என்கிற பெயரில் வெளியான திரைப்படங்கள் எல்லாமே அவை வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் பாகம் எடுத்தால் என்ன என்கிற எண்ணத்தில் எடுக்கப்படவை தான்.

ஆனால், 13 வருடங்களுக்கு முன்பே இயக்கிய சாமி திரைப்படத்தின் இறுதியில், சாமியின் வேட்டை தொடரும் என இரண்டாம் பாகத்துக்கான லீட் வைத்திருந்தார் இயக்குநர் ஹரி.

இதுதான் சாமி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சரியான தருணம் என முடிவு செய்த இயக்குநர் ஹரியும் விக்ரமும் „சாமி 2...க்காக கூட்டணி சேர்ந்துள்ள அறிவிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர்.

ஆனால், இந்தத் திரைப்படம்  முதல் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முன்கதையாக உருவாக்கப்படவுள்ளதாம்.சொல்லப்போனால் அஜீத் நடித்த பில்லா 2 பாணியில் உருவாகவுள்ளதாம்.

முன்கதையில் விக்ரம், கொஞ்சம் நெகடிவ் சாயல் வரும் வகையில் நடிக்கவுள்ளாராம். அதன் பின் அவர் பொலிஸ் துறையில் சேர்வது, திருநெல்வேலிக்கு மாற்றலாகி வருவதுக்கு முன் வேறு ஒரு நகரத்தில் உள்ள ரௌடிகளின் கொட்டங்களை அடக்கியதுபோன்று கதை நகர்வதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .