Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மே 11 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும், சட்டை அழுக்கானாலும் பரவாயில்லை தொடர்ந்து போராடுவேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
குட்டிபுலி, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள மருது திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போது, ராதாரவியுடன் நடித்த அனுபவம் பற்றியும், திருட்டு விசிடி பற்றி காரசாரமாக பேசினார் நடிகர் விஷால்.
'பைரஸி விடயத்தைப் பற்றி நான் ஒருவன் தான் மறுபடியும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். 24 திரைப்படத்தின் விசிடி வந்துவிட்டது, எங்கே சிடி ஆக்கினார்கள் என்றுகூட தெரியும். ஆனால், யாருமே முயற்சி எடுக்கமாட்டாங்க, மருது வெளியாகும்போது, மே 19 ஆம் திகதியிலிருந்து நானும் என் நண்பர்களோட களத்தில் இறங்கப்போறேன். இந்தமுறை நான் விடமாட்டேன்.
மருது சிடியை கண்டுபிடித்தால், எந்த தியேட்டரில் படமாக்கியிருக்காங்கன்னு கண்டுபிடிச்சிடுவேன். தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுப்பேன், நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மீண்டும் உங்களைச் சந்தித்து என் முடிவு என்னவென்பதைச் சொல்கிறேன்.
எனக்கு போர் அடித்துவிட்டது. சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும், சட்டை அழுக்கானாலும் பரவாயில்லை.
நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக கேட்காமல், நடிகனாக, சக நடிகர்களுக்காகக் கேட்கிறேன். என்ன ஆனாலும் பரவாயில்லை ஒரு கை பார்த்துவிடுகிறேன். நிச்சயம் ஒன்றிணைந்து பைரஸியை கொன்றே தீரவேண்டும்.
நான் ரசித்து நடித்த காட்சிகளென்றால் அது ராதாரவி அண்ணனுடன் நடித்து தான். மைன்ட் வாய்ஸா சில நேரங்களில் நான் யோசிப்பதை, வசனங்களா முத்தையா இந்தத் திரைப்படத்தில் ராதாரவியுடனான காட்சிகளில் மாற்றிக்கொடுத்திருக்கிறார் முத்தையா. என்ன வசனம்னு சொல்லமாட்டேன், திரைப்படத்தில் பாருங்க' என்று ட்விஸ்ட் வைத்தார் விஷால்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago