2025 மே 14, புதன்கிழமை

'தல' வழியில் 'சின்ன தல'

George   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரிசையாக ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அவருடைய தொடர் வெற்றிக்கு காரணம், அவர் தொழிலுக்கு கொடுக்கும் மரியாதை என்றும், தன்னால் படப்பிடிப்பு எந்த விதத்திலும் தாமதம் ஆகக்கூடாது என்கிற நல்ல எண்ணமும்தான் என்று கோலிவூட்டில் பேச்சு அடிபடுகிறது.
 
இந்நிலையில், இதை நிருபிக்கும் வகையில் அண்மையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கே.வி.ஆனந்த் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதிக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டது. ஒருசில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் விஜய்சேதுபதி நடித்து வரும் 'ரெக்க' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே திட்டமிட்டுள்ளதால், அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தன்னால் தாமதம் ஆகக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் காலில் ஏற்பட்ட சிறு காயத்துடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

'வேதாளம்' திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு அன்றும் அஜீத், காயத்தை பொருட்படுத்தாமல் நடித்து கொடுத்தது போலவே விஜய்சேதுபதியும் அதே பாணியில் நடித்து கொடுத்து தயாரிப்பாளரின் நஷ்டத்தை தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .