George / 2016 ஜூன் 17 , மு.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே செல்கிறது.
ஏற்கெனவே டீசர் வெளியாகி இந்திய அளவில் சாதனை படைத்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கபாலி திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகின.
குறிப்பாக 'நெருப்புடா....' பாடல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு இன்னொரு விருந்தாக கபாலி திரைப்படத்திலிருந்து இன்னொரு டீசர் வெளியாகியுள்ளது.
இது வெறும் டீசர் அல்ல பாடல் டீசர். அதாவது, கபாலி திரைப்படத்தில் உள்ள நெருப்புடா.... பாடல் பின்னணியில் இந்த டீசர் உருவாகியுள்ளது.
மக்களின் பிரச்னைக்காக ரஜினி போராடுகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதிலும் டீசரின் முடிவில் 'நான் வந்துட்டேனு சொல்லு, திரும்ப வந்துட்டேன்...' என்று முடிகிறது.
இந்த 2-வது டீசரும் சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகி கொண்டிருக்கிறது.
27 minute ago
53 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
53 minute ago
54 minute ago
1 hours ago