Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தில்லுமுல்லு (புதிய) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர், இஷா தல்வார். 'தட்டத்தின் மறயத்து' என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதே திரைப்படம், 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற பெயரில் தமிழில் தயாராகி இருக்கிறது. இஷா தல்வாரே கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
2 வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடித்தது பற்றி இஷா தல்வார், பேட்டி அளித்தார். அப்போது கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு இஷா தல்வார் அளித்த பதில்களும்,
கேள்வி: நிஜ வாழ்க்கையில் நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா?
பதில்:- எனக்கு இதுவரை யார் மீதும் காதல் வரவில்லை. என்னைப் பற்றி எந்த கிசுகிசுவும் வந்ததில்லை.
கேள்வி:- மும்பை கதாநாயகிகள் முத்தக் காட்சிகளில் தாராளமாக நடிக்கிறார்கள். நீங்கள் முத்தக் காட்சியில் நடிப்பீர்களா?
பதில்:- முத்தம், மனித வாழ்க்கையில் ஒரு பகுதிதான். எனவே முத்தக் காட்சியில் நடிப்பது தப்பு அல்ல என்று கருதுகிறேன். கதைக்கு தேவைப்பட்டால், முத்தக் காட்சியில் நான் நடிப்பேன்.
கேள்வி:- காதல், சோகம் இரண்டில் எந்த காட்சியில் நடிப்பது சுலபம்?
பதில்:- நடிப்பது, என் தொழில். அதில், எல்லாவிதமான காட்சிகளிலும் நடிப்பது என் கடமை. காதல், சோகம் இரண்டும் நடிப்புதான். எது சுலபம், எது சிரமம் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான்.
கேள்வி:- 'தில்லுமுல்லு' திரைப்படத்துக்குப்பின் தமிழ் திரைர்பட உலகில் உங்களுக்கு ஒரு இடைவெளி விழுந்து விட்டதே?
பதில்:- மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி திரைப்படங்களில் நடித்ததால்தான் இந்த இடைவெளி. இனிமேல், தமிழ் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்துவேன்.' இவ்வாறு இஷா தல்வார் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
1 hours ago