2025 மே 16, வெள்ளிக்கிழமை

'விரும்பம் போல ஓட்டு போடலாம்': விஜய் அறிக்கை

George   / 2016 மே 10 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தேர்தலில் எனது ரசிகர்கள் தங்களது விருப்பம் போல் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம்' என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் மே 16ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், தமிழகமெங்கும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. 

சில கட்சிகளுக்காக சினிமா நடிகர்களும் பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகர் விஜய், தனது ரசிகர்களிடத்தில் திமுக.,வுக்கு ஆதரவாக செயல்படுமாறு கூறியதாக செய்தி வந்தது. ஆனால், அந்த செய்தி உண்மையில்லை என விஜய் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "மக்கள் இயக்கம் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை, அப்படி வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது.

தேர்தலில் எந்தகட்சிக்கும் மக்கள் இயக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிக்கவில்லை. 

நடைபெற இருக்கின்றன தேர்தலில் எனது ரசிகர்கள் தங்களது விருப்பம் போல் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம். அதேசமயம், இந்த தேர்தலில் மக்கள் இயக்கத்தின் பெயரையோ அல்லது கொடியையோ கண்டிப்பாக பயன்படுத்த கூடாது" என விஜய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .