2021 ஜூலை 28, புதன்கிழமை

வெளியாகியது எந்திரன் ட்ரெய்லர்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகளாவிய ரீதியில் எதிர்பார்ப்பினை உருவாக்கியிருக்கும் எந்திரன் திரைப்படத்தின் உத்தியோகபூர்வ 'ட்ரெய்லர்' வெளியீடு இன்று தென்னிந்தியாவின் பல பாகங்களில் நடைபெற்றது.

பல கோடிகளை கொட்டி ஹொலிவூட்டிற்கு சவால்விடும் வகையில் எந்திரன் திரைப்படத்தினை உருவாக்கியருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் இயற்குநர் ஷங்கர், ஹொலிவூட் படத்திற்கு இணையாக எந்திரனை உருவாக்கியிருக்கிறார். ரஜனிகாந்த் - ஐஸ்வர்யா கூட்டணி இந்தப்படைப்பின் முக்கிய பாத்திரங்கள். இசை உயிர் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படி பிரமாண்டங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் எந்திரன் படத்தின் 'ட்ரெய்லர்' இன்று சனிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரஜனிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் மற்றும் பல முன்னணி திரைப்பட கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். எந்திரன் திரைப்படத்தில் ட்ரெய்லரை பார்த்த அனைவரும் பிரம்மிப்பில் ஆழ்ந்துபோயுள்ளார்கள். ஹொலிவூட் திரையுலகிற்கு சவால்விடும் இயக்குநர் என ஷங்கரை எல்லோரும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .