2025 ஜூன் 28, சனிக்கிழமை

கெட்டவனானது போதும்; அஜீத்துக்கு அட்வைஸ்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


'தொடர்ந்து கெட்டவனாகவே நடித்தது போதும். இனி நல்லவர் கதாபாத்திரங்களில் நடிங்க' என்று மனைவி ஷாலினி சொன்னதைக் கேட்டுத்தான் நடிகர் அஜீத் தனது அடுத்த திரைப்படமான 'வீரம்' திரைப்படத்தில் நல்ல ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

'பில்லா', 'அசல்', 'பில்லா௨', 'மங்காத்தா', 'ஆரம்பம்' என தொடர்ந்து வில்லத்தனம் கலந்த ஹீரோவாகவே நடித்து வருகிறார் அஜீத். வில்லத்தனம் கலந்த ஹீரோ என்றால் பல விதங்களிலும் வசதி என நினைத்துதான் அந்த மாதிரி கதாபாத்திரங்களைக் கேட்டு நடித்தாராம்.

ஆனால் இப்போது அஜீத் என்றால் கெட்டவர் என்பது போன்ற இமேஜ் வருவதை அஜீத் மனைவி ஷாலினி சுத்தமாக விரும்பவே இல்லையாம். அதனால்தான் 'சிறுத்தை' சிவா இயக்கும் 'வீரம்' திரைப்படத்தில் நல்ல ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

'வீரம்' திரைப்படத்தில் அஜீத் வேஷ்டி - சட்டை அணிந்து, பாசமிகு அண்ணனாகவும் அநியாயத்துக்கு எதிராக போராடுபவராகவும் வருகிறாராம். இந்த திரைப்படத்துக்கான கதை விவாதத்தின்போது, தன் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சிவா வர்ணித்ததை ரசித்த அஜீத் உடனே ஒப்புக் கொண்டாராம்.

இதற்கு முக்கிய காரணமே, ஷாலினியின் வேண்டுகோள்தானாம். தொடர்ந்து வில்லனாக நடிக்க வேண்டாம். இனி நல்ல ஹீரோவாக நடியுங்கள் என ஆரம்பம் படப்பிடிப்பின்போதிருந்தே சொல்லிக் கொண்டு வந்தாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .