2025 மே 19, திங்கட்கிழமை

ஆசை நாயகனுடன் இணைகிறார் சமந்தா

Menaka Mookandi   / 2014 மே 15 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது ஆசை நாயகன் சித்தார்த்துடன் நடிகை சமந்தா மீண்டும் ஜோடி சேரவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடிகர் சித்தார்த்தும் நடிகை சமந்தாவும் தெலுங்கில் ஒரேயொரு திரைப்படத்திலேயே ஜோடி சேர்ந்தார்கள். இத்திரைப்படத்திலேயே இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இவர்கள் இருவரும் ஜோடியாக பல்வேறு விருந்துபசார மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தனர். இதனால், அவ்விருவருக்கும் இடையிலான காதல் கசியத் தொடங்கியது.

ஆதனால், பின்னர் அவர்கள் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர். இந்த நேரத்தில், அவர்களுக்கு இரகசியமாக திருமணம் நடந்து முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகத் தொடங்கின.

இருந்த போதிலும், அதற்கு இருவருமே எந்தவொரு பதிலும் கொடுக்கவில்லை. சித்தார்த்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில் எதுவும் கேட்க வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

இதையடுத்து, சித்தார்த் நடித்த தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சமந்தா, இப்போது ஒரு திரைப்படத்தில் மீண்டும் சித்தார்த்துடன் டூயட் பாடப் போகிறாராம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கும் அத்திரைப்படம், உயிரோட்டமான ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறதாம்.

அதனால், அந்த கதையில் சித்தார்த் மற்றும் சமந்தா போன்றவர்கள் நடித்தால் இன்னும் உயிரோட்டமாக காட்சிகள் அமையும் என்றுதான் அவர்களை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.

தற்போது, சித்தார்த் நடித்துக்கொண்டிருக்கும் லுசியா, காவியத்தலைவன் போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் சமந்தாவுடன் ஜோடி சேரப்போகிறாராம் சித்தார்த்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X