2025 மே 19, திங்கட்கிழமை

டிடிக்கு டும்...டும்..டும்...

Menaka Mookandi   / 2014 மே 30 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னிந்திய தொலைக்காட்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினிக்கு விரைவில் டும் டும் டும் கொட்டப் போகிறார்கள். தன்னுடைய பால்ய நண்பரையே மணக்க இருக்கிறாராம் அவர்.

டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவ்வளவு அழகான தொகுப்பாளினியாக மக்கள் மனம் கவர்ந்தவர். தெளிவான உச்சரிப்பாலும் கலகலப்பான பேச்சாலும் அனைவரையும் கட்டிப்போட்டவர்.

தொகுப்பாளினி, பகுதி நேர பேராசிரியை என்று பன்முகங்கள் காட்டி ஜொலித்துவரும் டிடி, அண்மையில் நடைபெற்ற விஜய் டிவி டெலி அவார்ட் நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினியாக விருது பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

இதுபற்றி டிடி கூறுகையில், ரொம்பவே சந்தோஷமான தருணம் இது. மொத்தமாக 29 பிரிவுகளில் கொடுக்கப்பட்ட விருதில் சிறந்த தொகுப்பாளினி விருது எனக்கு கிடைத்துள்ளது. நாம ஏதோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறோம். அது மக்களுக்கு பிடிப்பதால்தான் இப்படியான விருதுகள் வரைக்கும் செல்ல முடிகிறது.

முதலில் அவர்களுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியின்போது விஜய் டிவி குழுவினர் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து அரட்டை அடித்து கொண்டாடியதை மறக்கவே முடியாது என்கிறார் திவ்யதர்ஷினி.

அதேநேரத்தில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக டிடியின் வீட்டில் அவரது திருமணத்தைப் பேசி முடித்துள்ளார்களாம். மாப்பிள்ளையின் பெயர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், அவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணியாற்றியவர். விரைவில் திரைப்படம் இயக்கப் போகிறார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் நாங்கள் இருவரும் நண்பர்கள். என்னோட வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கின நேரம். அவரோட வீட்டில் அவருக்கு பொண்ணு பார்க்க தொடங்கினாங்க.

ஒரு வழியாக ரெண்டு பேர் வீட்டிலும் உள்ள பெரியவங்களே பேசி எங்கள் திருமணத்தை முடிவு செய்துட்டாங்க. ஜூன் இறுதியில் சென்னையில் திருமணம். இத்தனை நாட்களாக என்னோட நண்பனாக இருந்த ஸ்ரீகாந்தை, ஹாய் மாமா என்றுதான் செல்லமாக கூப்பிடுவேன்.

அவ்ளோ ஜொலியான, க்யாரிங்கான நபர். இப்போ என்னோட லைஃப் பார்ட்னராகவே ஆகிட்டார். ரொம்பவே சந்தோஷமா இருக்கு. உங்க எல்லோரோட ஆசீர்வாதமும் எங்க ரெண்டு பேருக்கும் வேண்டும் என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.

தனது திருமணம் குறித்து டிவிட்டரிலும் செய்தி போட்டுள்ளார் திவ்யதர்ஷினி. மொத்ததில் நம்ம வீட்டு கல்யாணம் தொகுப்பாளினியாக இருந்த திவ்யதர்ஷினியை விரைவில் அதே நிகழ்ச்சியில் விருந்தினராக பார்க்கலாம்.






You May Also Like

  Comments - 0

  • swiss hirama makkal Wednesday, 11 June 2014 05:05 AM

    திருமண வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X