2025 மே 19, திங்கட்கிழமை

சிம்புவுக்கான நயனின் சொந்த குரல்

Menaka Mookandi   / 2014 ஜூன் 10 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


முதல் முறையாக தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசப் போகிறாராம் நடிகை நயன்தாரா. பத்தாண்டுகளாக சினிமாவில் இருக்கும் நயன்தாரா, இதுவரை தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியதே இல்லை. சிம்புவுடன் அவர் நடிக்கும் இது நம்ம ஆளு திரைப்படத்தில்தான் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசப் போகிறார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு டப்பிங் பேசும் எண்ணம் நயன்தாராவுக்கு இல்லையாம். ஆனால் இயக்குநர் பாண்டிராஜ்தான் அவரை சமாதானப்படுத்தி பேச சம்மதிக்க வைத்தாராம்.

இந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்ததும் பாண்டிராஜ்தான். கரைப்பார் கரைத்தால் நயனும் சிம்புவுடன் நடிப்பார் என்று அப்போது பேசப்பட்டது. இப்போது டப்பிங் பேசவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதேவேளை, திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே நான் பட விளம்பர நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறிவிடுகிறாராம் நயன்தாரா.

பொலிவூட்டில் ஒரு படத்தை எடுத்து முடித்த பிறகு அதில் நடித்த நடிகர், நடிகைகள் ஊர், ஊராக செல்வதுடன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் சென்று படத்திற்கு விளம்பரம் தேடுகிறார்கள். அங்கு படத்தின் ஒப்பந்தத்திலேயே அவர்கள் விளம்பர நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் கோலிவூட்டில் அப்படி இல்லை. அதனால் நடிகர், நடிகைகள் அனைவரும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வந்துவிடுவது இல்லை. இந்நிலையில் நயன்தாராவோ, தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது அதில் தான் எந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன் என்பதை சேர்த்த பிறகே கையெழுத்திடுகிறாராம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X