2025 மே 19, திங்கட்கிழமை

சர்ச்சையில் சமந்தா

Super User   / 2014 ஜூன் 23 , மு.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண் காலை ஆண் தொடுவது போல் வெளியான சமந்தாவின் சர்ச்சைக்குரிய புகைப்பட போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சமந்தா ஏற்கனவே இது போன்று வெளியான ஒரு தெலுங்கு பட போஸ்டரை கண்டித்தார். மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் கடற்கரையோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் ஒரு பெண் கைகளை ஊற்றி நாய் போன்று தொடர்வது போன்றும் அப்படம் இருந்தது.
 
இந்த போஸ்டர் பெண்களை இழிவு படுத்தவது போல் உள்ளது என்று சமந்தா கண்டித்தார். இது மகேஷ்பாபுவுக்கும் அவரது இரசிகர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. சமந்தாவுக்கு எதிராக பேஸ்புக், டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டனர்.

அதே சமந்தா தற்போது ஒரு ஆண் தனது காலை பிடிப்பது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மகேஷ்பாபு இரசிகர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த காட்சி அஞ்சான் படத்தில் இடம் பெற்று உள்ளது. கடற்கரையில் சமந்தா கவர்ச்சியாக படுத்து இருப்பது போன்றும் அவரது கால்களை சூர்யா தொட்டுக் கொண்டு இருப்பது போன்றும் இதை எடுத்து உள்ளனர்.

இந்த படத்தை பார்த்து தான் மகேஷ்பாபு இரசிகர்கள் கோபமாகியுள்ளார்கள். மகேஷ்பாபு படத்தில் பெண்ணை கேவலப்படுத்தியதாக சொன்னவர் அஞ்சான் படத்தில் ஆண்களை கேவலப்படுத்துவது போன்ற காட்சியில் நடித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

அமலாபோலின் தேனிலவு சர்ச்சை

யாரும் கற்பனைக் குதிரையை முரட்டுத் தனமாக தட்டிவிடாதீர்கள். இயக்குனர் விஜய் - அமலா பாலின் தேனிலவுக்காக தயார் செய்யப்பட்ட கட்டில் படத்தை அமலாபாலே டுவிட்டரில் வெளியிட்டதால் வந்த சண்டை இது.

சமீபத்தில் திருமணமான இயக்குனர் விஜய்யும் அமலா பாலும் மாலைதீவுக்கு தேனிலவு கொண்டாட சென்றுள்ளனர்.

மாலைதீவில் தன் கணவர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட படத்தையும், அவர்கள் தேனிலவுக்காக ஏற்பாடு செய்திருந்த கட்டிலையும் படம் எடுத்த அமலா, அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றினார்.

அந்தப் படங்களைப் பார்த்த இரசிகர்கள், தங்கள் அபார கற்பனைத் திறனை ஆபாச கமெண்டுகளாக அள்ளித் தெளிக்க ஆரம்பித்தனர். அடுத்தடுத்து அந்தப் படங்களை மோசமான தலைப்புகளுடன் பகிர ஆரம்பித்தனர்.

இது அமலா பாலை அப்செட்டாக்கிவிட்டது. ஆத்திரத்தில் இரசிகர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் இறங்கினார் அமலா பால். இரசிகர்களும் சளைக்கவில்லை.

எனவே, அந்த படங்களை அமலாபால் உடனே டுவிட்டரிலிருந்து நீக்கிவிட்டார். தேனிலவு கொண்டாட வந்த இடத்தில், இப்படி ஏழரையைக் கூட்டிவிட்டார்களே இரசிகர்கள் என்று புலம்பிய அமலாவை சமாதானப்படுத்தினாராம் கணவர் விஜய்.

பாவம் தமன்னா!

தமன்னா மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஹிந்திப் படமான ஹம்சகல்ஸ் வெளியான முதல் நாளே படுதோல்விப் படமாக அமைந்து விட்டது.

அவர் நடித்த முதல் படமான ஹிம்மத்வாலாவும் படுதோல்வி அடைந்த நிலையில் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார். ஆனால், நேற்று வெளியான படத்திற்கு இரசிகர்களின் வரவேற்பும், விமர்சகர்களின் வரவேற்பும் மிக மோசமாக அமைந்து விட்டது.

வட இந்திய பத்திரிகைகள், இணையதளங்கள் என அனைத்துமே படத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. பொதுவாக விமர்சனங்களுக்கு ஸ்டார் வழங்கி தரத்தைக் குறிக்கும் அவை இந்த படத்திற்கு வெறும் அரை ஸ்டார் மட்டுமே வழங்கியுள்ளன.

சமீபகால இந்திப் படத்தில் இவ்வளவு மோசமாக எந்த படமும் விமர்சிக்கப்பட்டதில்லை என்கிறார்கள். முதல் பதினைந்து நிமிடம் கூட படத்தை உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என பொலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த படத்திற்கு கிடைத்துள்ள மிக மோசமான வரவேற்பு தமன்னாவை மிகவும் கவலையடைய வைத்துவிட்டதாம். இந்த படம் மூலம் எப்படியாவது ஹிந்தி பட உலகில் காலூன்றி விடலாம் என நினைத்திருந்தாராம்.

நேற்று அறைக்குள்ளேயே அடைபட்டு அழுது கொண்டிருந்தார் என சொல்கிறார்கள்.

தனக்கும் ஹிந்தி படங்களுக்கும் ராசியில்லாமல் போகிறதே என வருத்தமடைந்தாராம். அடுத்து அக்ஷய் குமாருடன் ஜோடி சேர்ந்துள்ள படமாவது தனக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறாராம்.
 
தமிழில் தமன்னாவுக்கு எந்த படமும் கைவசம் இல்லை. தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்துள்ள ஆகாடு விரைவில் வெளிவர உள்ளது. இந்த படமாவது கைகொடுத்தால்தான் தெலுங்கிலும் அவர் நிலைக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டதாம்.

வருத்தப்படும் சதா

சதாவை ஞாபகம் இருக்கிறதா? ஜெயம் படத்தில் பாவாடை, தாவணியில் அறிமுகமாகி இளவட்டங்களை கவர்ந்தவர் அடுத்த படத்திலேயே அதிரடி கவர்ச்சி வேடத்தில் நடித்து ஷாக் கொடுத்தார்.

அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே என அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் காணாமல்போனார்.

தெலுங்கு, மலையாளத்துக்கு போனார். அங்கும் வாய்ப்புகள் மங்கின. தெலுங்கில் எமலீலா 2 ஆம் பாகத்திலும், மலையாளத்தில் கெல்வி என்ற படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்தார்.

டொப் இடத்திற்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்த நீங்கள் அந்த இடத்தை அடையாதது ஏன்? என்று சதாவிடம் கேட்டபோது, தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வந்தபோது எந்த ஆயத்தமுடனும் வரவில்லை. வெற்றியை எதிர்பார்க்கவும் இல்லை. இதுவரை என்ன சாதித்தேனோ அதெல்லாம் என்னுடைய சொந்த உழைப்பில் செய்தது.
 
அதில் எனக்கு சந்தோஷம். நான் ஆசாரமான குடும்பத்திலிருந்து வருகிறேன். நடிப்பை மற்றொரு வேலையாகத்தான் பார்த்தேன். சினிமாவில் எனக்கு வழிகாட்ட காட் பாதர் யாரும் கிடையாது. மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கும் அளவுக்கு நட்பு எல்லையும் பெரிய அளவில் கிடையாது.

ஷூட்டிங் எப்போது முடிகிறதோ உடனே வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிடுவேன். வாழ்க்கையில் என்ன வருகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை என்றார்.

தல வழியில் ஜெய்

திரைப்பட நடிகரான ஜெய்க்கு சமீபகாலமாக கார் பந்தயங்களில் மோகம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் சென்னையில் நடைபெறும் தேசிய கார் பந்தய போட்டிகளில் முதன்முறையாகக் கலந்துகொள்கின்றார்.
 
இதுபற்றி அவர் கூறியதாவது,

சென்னையில் நடைபெற உள்ள தேசிய கார் பந்தயப் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள். இரண்டு சுற்றுகள் சென்னையிலும், அதற்குப் பின்னர் கோயம்புத்துரிலும் நடைபெறும் இந்தப் பந்தயத்தின் இறுதிப்போட்டி புதுடெல்லியில் நடைபெற உள்ளது.

பார்ணிலா பந்தயத்தில் பங்கு பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த போட்டி அடிப்படையானதாகும்.
 
நான் கடந்த ஏழு மாதங்களாகப் பயிற்சி பெற்று வரும்போதும் பதட்டமாக உணருகின்றேன். மொத்தம் 29 பேர் இதில் பங்கு பெறுகின்றனர். எல்லோரும் இறுதி நிலையை எட்டுவார்களா என்பது தெரியவில்லை.

எனக்கு பயிற்சி அளித்துள்ள பொறியாளர்களும், பயிற்சியாளரும் முதல் ஐந்து இடத்திற்குள் நான் முடிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

என்னால் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இரு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தும் நடிகர் அஜீத்தைப் பற்றி கேள்விபட்ட போது எனக்கு தைரியம் வந்தது. அன்று முதல் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் கார் பந்தய பயிற்சிகளில் தனிப்பட்ட கவனம் செலுத்தத் தொடங்கினேன். எனது இந்த ஆர்வத்திற்கு தடை ஏற்படாத வண்ணம் தயாரிப்பாளர்களும் எனது கால்ஷீட்டை பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என ஜெய் தெரிவித்தார்.

அஜீத்துக்கு த்ரிஷா பாராட்டு

அஜீத்தும் த்ரிஷாவும் கொளதம் மேனன் இயக்கும் புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே ஜி, கிரீடம், மங்காத்தா படங்களில் இணைந்து நடித்தனர். இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக அனுஷ்காவும் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறது.

இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆயிரம் தோட்டாக்கள் என்ற தலைப்பை பரிசீலிப்பதாக பேசப்பட்டது. ஆனாலும் அது உறுதியான தகவல் இல்லை. அஜீத் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அஜீத்துடன் மீண்டும் நடிப்பது குறித்து த்ரிஷா கூறும் போது, அஜீத்துடன் நான் நடிக்கும் நான்காவது படம் இது. எனது திறமை பற்றி அவர் ஏற்கனவே அறிந்து இருந்ததால் இந்த படத்தில் அழுத்தமான கேரக்டரில் என்னை நடிக்க வைத்துள்ளார். தல தலதான் என்றார்.

தற்போது த்ரிஷா, பூலோகம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியிடுவதற்கு தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X