2025 மே 19, திங்கட்கிழமை

பாகுபலியில் தமன்னா...

Kogilavani   / 2014 ஜூன் 27 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


இயக்குநர் ராஜமவுலி பிரமாண்டமாக உருவாக்கி வரும் பாகுபலி படத்தில் முக்கிய வேடத்தில் தமன்ன நடிக்கவுள்ளார்.

இவர் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. ஈகா (நான் ஈ) படத்துக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிவரும் படம் பாகுபலி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடிக்கின்றனர்.

தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வந்த ராஜமவுலி, கோடைக்காலம் என்பதால் சில தினங்கள் படக்குழுவுக்கு விடுமுறை அளித்திருந்தார்.

இந்த நிலையில் படத்தில் முக்கிய வேடம் ஒன்றிற்காக தமன்னாவை ஒப்பந்தம் செய்தார் ராஜமவுலி. தமன்னா வருகையுடன் பாகுபலி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்துக்காக ஹைதராபாத்தில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோவிலும், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலும் சிறப்பு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு தளங்களிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்புகளை நடத்தவுள்ளார்  ராஜமவுலி.




You May Also Like

  Comments - 0

  • pushpa Sunday, 29 June 2014 04:38 PM

    எத்தனை காலத்துக்குதான் இந்த அழகு அலங்காரம்???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X