2025 மே 19, திங்கட்கிழமை

அதிக வரவேற்பை பெற்ற வேலையில்லா பட்டதாரி டிரைலர்

Super User   / 2014 ஜூன் 29 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தை அவருடைய சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருக்கிறார்.

மேலும் இவர்களுடன் சரண்யா, சமூத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி 10 நாட்களில் மட்டும் 15 இலட்சம் பேர் பார்த்துள்ளனர். இதுவரை தனுஷ் நடித்த எந்தவொரு படத்தின் டிரைலருக்கும் இத்தகைய ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை.

இது தனுஷ் மற்றும் வேல்ராஜ் உட்பட படக்குழுவினருக்கு பெரிய மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. மேலும் இப்படத்தின் விளம்பரத்திற்காக சிறப்பு வீடியோ பாடல் ஒன்றையும் படக்குழு உருவாக்கி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது. வேலையில்லா பட்டதாரி தனுஷ் நடிக்கும் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X