2025 மே 19, திங்கட்கிழமை

உலகின் மிகவும் கவர்ச்சியான பெண்; தீபிகாவுக்கு முதலிடம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 04 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் மிகவும் கவர்ச்சிகரமான 100 பெண்களின் பட்டியலில் பொலிவூட் நடிகை தீபிகா படுகோன் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் வெளியாகும் எப்ஹெச்எம் என்ற மாத இதழ் உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகின்றது. இந்தப் பிரிவிற்காக நடத்தப்பட்ட இந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பொலிவூட் நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து அவ்விதழின் புதிய பதிப்பில் தீபிகா இடம் பெற்றுள்ளார். தன்னைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 100 பெண்களின் பெயர்கள் வந்துள்ள புதிய பதிப்பினையும் நேற்று அவர் வெளியிட்டார்.

இந்தத் தேர்விற்கு தன்னுடைய வெளித்தோற்றம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. தான் செய்த பணிகளும், தனக்குக் கிடைத்த வித்தியாசமான கதாபாத்திரங்களின் சிறப்புமே இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் அவர் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அவருடைய வேறுபட்ட நடிப்புத் திறமைகளைக் காண்பித்தவை. அதனால்தான் தீபிகா இந்த இடத்தைப் பெற்றுள்ளார்.

புறத்தோற்றம் மட்டுமே முக்கியமல்ல, திறமையும்தான் முக்கியம் என்பது இவ்வெற்றிக்கான காரணமாக கூறப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக பொலிவூட்டின் காத்ரீனா கைப் இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா தற்போது பைண்டிங் பான்னி என்ற படத்தில் நடித்து வருகின்றார். ஹோமி அட்ஜானியா இயக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் கபூர், நஸ்ருதீன் ஷக், டிம்பிள் கபாடியா ஆகியோரும் தீபிகாவுடன் இணைந்து நடிக்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X