2025 மே 19, திங்கட்கிழமை

த்ரிஷாவின் தீவிர காதல்

Kogilavani   / 2014 ஜூலை 07 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை த்ரிஷா - ராணா ஜோடியின் காதல் தீவிரமாகியுள்ள நிலையில் இருவரும் இணைந்து விடுறையை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளனராம்.

இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவியிருந்த நிலையில் திரைபடவிழாக்களில் ஒன்றாக பங்கேற்றிருந்ததுடன் விருந்து நிகழ்ச்சிகளில் அருகருகே அமர்ந்தனர். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த படகு விழா ஒன்றில் ஜோடியாக நடனம் ஆடினார்கள்.

எனினும், இவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட செய்தியை இருவரும் மறுத்ததுடன் நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்றார்கள். ஆனாலும் யாருமே இதனை நம்பவில்லை இருவரும் காதலிப்பது உறுதி என்றனர்.

தற்போது இதனை நிரூபிக்கும் வகையில் இருவரும் அமெரிக்காவில் ஜோடியாக விடுமுறையை கொண்டாடுகிறார்கள். வடஅமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்பு நடத்தும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக த்ரிஷா அங்கு சென்றுள்ளார்.

த்ரிஷா அமெரிக்கா போனதை தொடர்ந்து ராணாவும் அங்கு செல்கிறார். அமெரிக்கா எனக்கு பிடித்த இடம். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அங்கு செல்கிறேன் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

த்ரிஷாவும் ராணாவும் அமெரிக்காவில் சில நாட்கள் ஜாலியாக விடுமுறையை கழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அங்கு தமது காதலை மேலும் உறுதியாக்கி விட்டு நாடு திரும்புவார்கள் எனவும் திரைப்பட உலகில் கிசுகிசுக்கப்படுகின்றது.

ரம்பா விவாகரத்து குஷ்பு கண்டனம்


ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திர பத்மநாதனுக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சம்பா என பெயரிட்டுள்ளனர்.

ரம்பா தற்போது கனடாவில் கணவருடன் வசித்து வருறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதையும் அவர் நிறுத்தி விட்டார்.

கணவருடன் ரம்பாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், மீண்டும் ரம்பா சினிமாவில் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், குஷ்பு சில தினங்களுக்கு முன் குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட கனடாவிற்கு சென்றிருந்தார்.

குஷ்பு கனடா வந்துள்ள தகவல் ரம்பாவுக்கு தெரியவர நேரில் போய் தனது வீட்டுக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்தார்.

இதனையடுத்து குஷ்பு தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். கனடாவில் ரம்பா வீட்டுக்கு சென்றேன். அங்கு ரம்பாவும் அவரது கணவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு என்றும் பிரியப்போகிறார்கள் என்றும் செய்தி பரப்புவது ரொம்ப தவறு. இது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள் என அந்த செய்தியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கத்தியில் அஜீத்


துப்பாக்கி பட வெற்றிக்கு பிறகு விஜய் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் கத்தி படத்தில் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். தீபாவளிக்கு இப்படம் வெளிவர இருப்பதால் துரித வேகத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய செய்தி என்னவென்றால், கத்தி படத்தில்  கௌரவ வேடத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளியை அணுகியுள்ளார் முருகதாஸ்.

பொலிவுட் பிரபலங்கள் வரை யோசித்த முருகதாஸ், திடீரென்று அஜீத்தை அணுகினால் என்ன என்று யோசனை வந்தவுடன் அதனை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றார்.

இதனையடுத்து விஜய், அஜீத்தை இணைத்து படம் எடுக்க தயார் என்றும் முருகதாஸ் அறிவித்துள்ளார்.

விஜய்  - அஜீத்  இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கின்றனர்.

இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் பெரிய ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் படங்களில் அது போன்ற நிலைமை இல்லை.

இந்நிலையில் கத்தி படத்தில் விஜய் - அஜீத்தை மீண்டும் இணைய வைக்கும் முருகதாஸின் முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காஜலின் இரகசியம்


பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அந்தப் படம் வெளிவந்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் அப்போது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்று வரை இருக்கிறார்.

ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் சரியான உடலமைப்பில் அவருடைய அழகை அவர் பராமரித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் காஜல் அகர்வாலுக்கு வரவேற்பு அதிகம். அதோடு ஹிந்திப் படங்களிலும் நடித்து அங்கும் புகழ் பெற்று விட்டார். சமீபத்தில் விஜய்யுடன் ஜில்லா படத்தில் ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

தன்னுடைய அழகு ரகசியம் என்ன என்பதை காஜல் அகர்வாலே கூறியிருக்கிறார்.

எனக்கு பெங்காலி ஸ்வீட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டேன். ஐஸ் க்ரீம் என்றால் அவ்வளவு ஆசை.

இவையெல்லாம் வழக்கமாக நான் சாப்பிடும் ஐயிட்டங்கள்.

அப்புறம் ஹைதராபாத் பிரியாணி என்றால் ரொம்பவே பிடிக்கும். மதிய உணவு நேரத்தில் எனக்கு கண்டிப்பா பிரியாணி இருக்க வேண்டும். எப்போதெல்லாம் ஹைதராபாத் வருகிறேனோ, அப்போது பிரியாணி சாப்பிடாமல் இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இவ்வளவு சாப்பிட்டும் எப்படி குண்டாகமல் இருக்கிறார் என்கிறீர்களா, அதற்கும் பதில் வைத்திருக்கிறார். நான் நிறையவே சாப்பிடுவேன். இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருக்க மாட்டேன். யோகா, ஏரோபிக் இவற்றறோடு கார்டியோ உடற்பயிற்சிகளையும் செய்வேன். உடற்பயிற்சி செய்வதில் ரொம்பவே கவனமா இருப்பேன் என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

விஜய்க்கு அஜீத் அறிவுரை 


தமிழ் சினிமாவின் இளம் தம்பதியராக வலம் வரும் விஜய் - அமலாபால் ஜோடிக்கு நடிகர் அஜீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய், விக்ரம் உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட இவர்களின் திருமணத்தின் போது, அஜீத் கலந்துகொள்ளவில்லை.

அவர்களின் திருமணத்தின் போது, அஜீத் மலேசியாவில் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தார்.

இதனையடுத்து விஜய் மற்றும் அமலாபால் தம்பதியினருக்கு அஜீத் அறிவுரைகளுடன் கூடிய வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.

தியாகம் மற்றும் புரிதல் இரண்டுமே மிக முக்கியமானவை. இதை கற்றுக்கொண்டால் திருமண வாழ்வு சிறக்கும் என அஜீத் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அஜீத்தின் ஆத்மார்த்தமான இந்த வாழ்த்து செய்தியால் விஜய்யும், அமலாபாலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று அவர்கள் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அஞ்சான் ரெடி


சூர்யா நடித்த அஞ்சான் படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

மேலும் மனோஜ் பாஜ்பாய், வித்யுத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் இசையமைத்திருக்கின்றார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை செய்திருக்கின்றார்.
 
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விருதுகள் வழங்கும் விழாவில் கமல்ஹாசன், ஷாருக்கான் ஆகியோர். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் சூர்யாவின் அஞ்சான் டீசர் வெளியிடப்பட்டது. 

அஞ்சான் படத்தின் பாடல் வெளியீடு, இம்மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. அஞ்சான் படத்தின் மூலம் சூர்யா பாடகராகவும் அறமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X