2025 மே 19, திங்கட்கிழமை

விஜய்க்கு ஜோடி; தீபிகா மறுப்பு; ஸ்ருதி ஏற்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் நோ சொன்னதால் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இது ஃபேன்டசி கதை படமாக உருவாகிறது. இதில் ஹன்சிகா செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார்.

லீட் ரோலில் ஒரு பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க சிம்புதேவன் விரும்பினார். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. பிரியங்கா, பாலிவுட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் மியூசிக் ஷோக்களை நடத்துவதில் பிசியாக இருக்கிறார்.

இதனால் அவர் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க சில காட்சிகளுக்காக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்து கொடுத்துவிட்டு போனார் தீபிகா படுகோன். அதனால் அவரை அப்ரோச் செய்தால் விஜய்க்கு ஜோடியாக ஓகே சொல்வார் என பட யூனிட் நினைத்தது.

ஆனால் தமிழில் நடிக்க விரும்பவில்லை என தீபிகா ஜகா வாங்கிவிட்டாராம். அதனால் வேறு வழியில்லாமல் இப்போது ஸ்ருதிஹாசனை புக் செய்துள்ளது படக்குழு.

விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக ஸ்ருதி நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே படத்தில் நான் ஈ சுதீப், மாஜி ஹீரோயின் ஸ்ரீதேவி ஆகியோரும் நடிக¢க உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X