Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கில் ஐந்து திரைப்படங்கள் கைவசம் உள்ளன. இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். தமிழில் நடித்த திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் சம்பளத்தை இந்திய ரூபாய்ப்படி ஒரு கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.
விக்ரம் ஜோடியாக நடிக்கும் எண்றதுக்குள்ள என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. சம்பளத்தை உயர்த்தியது குறித்து சமந்தாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,
கதாநாயகிகள் அதிகம் சம்பளம் வாங்குவதாக பலரும் பேசுகிறார்கள். ஆனால், சினிமா உலகுக்குள் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரிவது இல்லை. பேசியபடி சம்பளத்தை வாங்க முடிவதில்லை. ஓரிரு படங்கள் ஓடாவிட்டால் சம்பளத்தை குறைத்து விடுகிறார்கள்.
படங்கள் ஓடினால் சம்பளத்தை கூட்டுவது இல்லை. ஒரு படம் வெற்றி அடைவதற்கு அதில் நடித்த கதாநாயகிக்கும் பங்கு உண்டு. அதனை யாரும் நினைத்து பார்ப்பது இல்லை. கதாநாயகிகளை இளக்காரமாகத்தான் பார்க்கிறார்கள். இதை எல்லாம் வெளியில் சொல்லக்கூடாது. ஆனாலும் சொல்லி விட்டேன். இவ்வாறு சமந்தா கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .