2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ரஜினியுடன் மீண்டும் இணையும் ஐஸ்

George   / 2015 பெப்ரவரி 22 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜினியுட் மீண்டும் ஐஸ்வர்யா ராய் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி-ஷங்கர் கூட்டணியில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'எந்திரன்'. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூலிலும் பிரம்மாண்டமான சாதனையை படைத்தது. இந்தத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். 

இந்நிலையில், எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரஜினியையே இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர். 

இதுகுறித்து, தற்போது இருவருமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். முதல்பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய், சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருப்பதால் இரண்டாம் பாகத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க திட்டமிருந்தார் ஷங்கர். 

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் பொலிவூட்டில் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருப்பதால், அவரையே மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக்கலாம் என முடிவு செய்துள்ளாராம்.

மேலும், இந்த திரைப்படத்தை ஹிந்தியிலும் பெரிய அளவில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதற்காக, பொலிவூட் நடிகர் அமீர்கானை இன்னொரு ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சியும் நடந்து வருவதாக கோலிவூட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுகுறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .