George / 2015 மார்ச் 10 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

நான் எந்த நிலைக்கு சென்றாலும், எனது கடின உழைப்பை கைவிட மாட்டேன். என்னுடைய வெற்றிக்கு முழு காரணம், எனது சொந்த முயற்சி தான் என்கிறார் பொலிவூ நடிகை அனுஷ்கா சர்மா.
பொலிவூட் திரையுலகின் பேரழகியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா. ஷாரூக்கான் உடன் ரப்னே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம், அனுஷ்கா சர்மா திரையுலகில் அறிமுகமானார்.
இன்று, அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். நடிப்பு என்பதை தாண்டி, இவ்வார இறுதியில் வெளியாக உள்ள என்.ஹெச் 10 திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அனுஷ்கா சர்மா மாறியுள்ளார்.
இது குறித்து கூறும்போது, இப்போது நான் வெறும் நடிகை மட்டுமல்ல, ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கூட. நான் எந்த நிலைக்கு சென்றாலும், எனது கடின உழைப்பை என்றைக்கும் கைவிட மாட்டேன்.
எனது முதல் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் என்ஹெச் 10, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. அந்த நாளுக்காக, நான் காத்துக்கொண்டிருக்கிறேன். கடின உழைப்பின் பலனாக, ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டிருக்கிறேன்.
ரப்னே பனா தி ஜோடி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து, தற்போது இந்த துறையில் 6 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டேன்.
எனது நடிப்புக்கு, ரசிகர்கள் மிகுந்த ஆதரவு தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே எனது நடிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.
எனக்கு தெரிந்த மற்றும் என்னால் முடிந்த கதாபாத்திரங்களையே நான் தேர்வு செய்து நடிக்கிறேன். இதையே, எனது வெற்றிக்கு காரணமாக நான் நினைக்கின்றேன் என்கிறார் அனுஷ்கா.
நீங்க சொன்னா சரி அம்மணி. ஓகே கண்மணி.
6 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago