2025 மே 19, திங்கட்கிழமை

அமலாவின் தொழில் பக்தி

George   / 2015 மார்ச் 16 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தொழில் பக்தியை யாரும் குறைசொல்ல முடியாது என்பதை மீண்டும் நிருபித்துள்ளார் நடிகை அமலாபோல்.

ஆரம்பத்தில் இருந்து எவ்வாறு இருந்தாரோ அதனை போலவே திருமணத்துக்கு பின்னரும் நடிப்பில் அதே சிரத்தைதான் காட்டிவருகிறார்.

தற்போது ஜோஷி இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து 'லைலா ஓ லைலா' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலாபோல். படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், அண்மையில் சில விடுபட்ட காட்சிகளை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படமாக்கினார் ஜோஷி.

அந்த காட்சியில் மோகன்லாலும் அமலாபோலும் சேர்ந்து நடிக்கவேண்டி இருந்தது. மோகன்லால் வந்துவிட்டார். அதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் அன்றைய தினம் தமிழில் 'ஹைக்கூ' என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டிருந்த அமலாபோல், படக்குழுவினரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு பெல்லாரிக்கு பறந்திருக்கிறார்.

இதில் என்ன தொழில் பக்தி இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதுதான் ஆச்சரியம். இத்தனைக்கும் அவர் நடிக்க வேண்டிய காட்சி அரை மணி நேரத்தில் படமாக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்காக ஒரே நாளில் அவர் பயணம் செய்த தூரம் 1,400 கிலோமீற்றர்கள்.

அமலாபோலின் வருகையால் மோகன்லாலும் ஜோஷியும் கூட ஆச்சர்யமடைந்து அவரை மனமார பாராட்டினார்களாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X