2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அனுவுக்கு தொடரும் சோதனை

George   / 2015 மார்ச் 21 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுஷ்காவின் ருத்ரமா தேவி திரைப்படம் மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் அனுஷ்கா, ருத்ரமா ராணி வேடத்தில் நடித்துள்ளார். ராணா, அல்லு அர்ஜுன், பிரகாஷ்ராஜ், சுமன், நித்யாமேனன், கத்ரினா திரேசா போன்றோரும் நடித்துள்ளனர். 

இளையராஜா இசையமைக்க குணசேகர் இயக்கி உள்ளார். 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ருத்ரமாதேவி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சரித்திர கதை என்பதால் இந்த திரைப்படத்துக்கு அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற படக்குழுவினர் முயற்சிக்கின்றனர்.
திரைப்படத்தின் இயக்குநர் குணசேகர் தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர்ராவை நேரில் சந்தித்து பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அப்போது கேளிக்கை வரி விலக்கு பெறுவது பற்றியும் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

பின்னர் திரைப்படத்தின் டிரெய்லரை காட்டினார். அதை பார்த்ததும் சந்திரசேகரராவ், கோபமடைந்தாராம். அதில் தெலுங்கானா மாநிலம் உதயமானதற்கு எதிரான வசனங்கள் இடம் பற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதுவே சந்திரசேகரராவை ஆத்திரப்பட வைத்ததாம்.

அதனை நேரிலேயே இயக்குநர் குணசேகரிடம் தெரிவித்துவிட்டார். இதனால் ருத்ரமா தேவி திரைப்படத்துக்கு சிக்கல் எற்பட்டு உள்ளது. வரி விலக்கும் கிடைக்காது என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

இந்த திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ள அனுஷ்கா, திரைப்படத்தின் தாமதத்தால் கவலையில் உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிதாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .