2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அஜீத்துக்காக வாய்பை இழந்த அனிருத்

George   / 2015 மார்ச் 22 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் அஜீத் நடிக்கும் திரைப்படத்துக்கு இசையமைப்பதற்காக, தெலுங்கில் முதன் முதலாக இசையமைக்க கிடைத்த வாய்ப்பை, அனிருத் உதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனு வைட்லா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள திரைப்படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். அந்த திரைப்படத்துக்கான பணிகள் ஆரம்பமாவதற்கு முன்பே அஜீத் திரைப்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு, அனிருத்துக்கு கிடைத்துவிட்டது. 

ஒரே சமயத்தில் இரண்டு பெரிய திரைப்படங்களில் இசையமைப்பது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் தெலுங்கில் ராம்சரண் திரைப்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை அனிருத்தே வேண்டாமென்று சொல்லிவிட்டாராம்.

தெலுங்கில் பிரபலமாவதை விட தமிழில் முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் அனிருத்தின் ஆசையாம். அதிலும் அஜீத் திரைப்படத்துக்கு இசையைமக்கும் வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் கிடைத்தால் விட்டுவிட முடியுமா?. அதனால்தான் தமிழா, தெலுங்கா என்று வந்த போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .