2025 மே 19, திங்கட்கிழமை

த்ரிஷாவின் தில்லான திகில்

George   / 2015 மார்ச் 22 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

த்ரிஷா தான் ஒரு தில்லான நடிகை என்பதை நிரூபிக்க திகில் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை த்ரிஷா, திருமண நிச்சயதார்த்தத்துக்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொள்வார் என எதிர்பார்த்தால் அடுத்தடுத்து பல புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். 

தற்போது தமிழ், கன்னடத்தில் தயாராகும் திகில் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் திரைப்படத்தை தெலுங்கில் 'லவ் யு பங்காரம்' என்ற திரைப்படத்தை இயக்கிய கோவி இயக்க உள்ளார். 

த்ரிஷா, இதுவரை எந்த ஒரு திகில் திரைப்படத்திலும் நடித்து கிடையாது. அப்படிப்பட்ட திரைப்படங்களில் நடிப்பதற்கு த்ரிஷாவுக்கு பயம் என முன்னர் செய்தி வெளிவந்தது. ஆனால், த்ரிஷா அதை மறுத்தார், எனக்கு அந்த மாதிரியான திரைப்படங்கள் வருவதில்லை, அதனால் அப்படிப்பட்ட திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றார்.

இப்போது த்ரிஷாவைத் தேடி இந்தப் திரைப்படம் வந்ததால் அவர் நடிக்க சம்மதித்தாராம். 'இந்தப் திரைப்படத்தின் கதையும் கதாபாத்திரமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. படப்பிடிப்பு மே மாதம்; ஆரம்பமாக உள்ளது,' என த்ரிஷா தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு முன்பாக இதுவரை நடிக்காத கதாபாத்திரங்களில் நடித்து விடுவதென த்ரிஷா முடிவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X