2025 மே 19, திங்கட்கிழமை

பேய் பிடிக்கும் கதாநாயகிகள்

George   / 2015 மார்ச் 23 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் காட்சிகளிலும் கலர் கலரான பாடல்களிலும் வந்து போனதில் சலிப்படைந்தோ என்னவோ, பேய் திரைப்படங்களிலும், சரித்திர, புராண திரைப்படங்களிலும் நடிப்பதற்கு தமிழ் சினிமா கதாநாயகிகள், ஆர்வம் காட்டுகின்றனர். 

ரசிகர்களும் இதுபோன்ற திரைப்படங்களை விரும்பி பார்க்கிறார்கள். இதுபோன்ற திரைப்படங்கள் வசூலிலும் முன்னிலை வகிக்கின்றன.

அனுஷ்காவுக்கு இதே மாதிரி திரைப்படங்கள் குவிகின்றன. ஏற்கனவே 'அருந்ததி' பேய் திரைப்படம் அவரை உச்சத்துக்கு கொண்டு போனது. தற்போது 'ருத்ரமா தேவி', 'பாகுபலி' என இரு சரித்திர திரைப்படங்களில் நடிக்கிறார். 

நயன்தாரா 'மாயா' என்ற பேய் திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் வித்தியாசமான வேடத்தில் வருகிறார். ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம் திரைப்படத்தில் சீதை வேடத்தில் நடித்து பாராட்டுகள் பெற்றார்.

இதுவரை காதல், டூயட் என வந்த திரிஷாவும் தற்போது பேய் திரைப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகிறது. 

ஹன்சிகா, ராய் லட்சுமி இருவரும பேய் திரைப்படமான அரண்மனையில் நடித்தனர். டாப்சி 'காஞ்சனா 2' பேய் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

பேய் திரைப்படங்கள் இலாபம் ஈட்டுவதால் அந்த கதைகளுக்கு இயக்குநர்கள்; மாற ஆரம்பித்துள்ளதுடன் நிறைய பேய் கதைகளோடு முன்னணி கதாநாயகிகள் வீட்டு கதவுகளை தட்டுவதாகவும் கேள்வி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X