2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விஜய்தான் எனது வலிமை: விக்ராந்

George   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் தனக்கு மிகப்பெரிய வலிமையாகவும் உத்வேகமாகவும் உள்ளதாக நடிகர் விக்ராந் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின் உறவினரான விக்ராந்த். 'கற்க கசடற' என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். 

கடந்த பத்து வருடங்களாக சினிமா துறையில் இருந்து வந்தாலும் இவருக்கு பேர் சொல்லும் திரைப்படமாக 'பாண்டியநாடு' அமைந்தது. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு நண்பனாக நடித்திருந்தார். தற்போது 'பிறவி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

விஜய் பற்றி விக்ராந்த் கூறும்போது, 'நான் விஜய்யின் சகோதரன் என்பதால் சினிமா உலகில் எளிதாக நுழைந்தேன். 

அவரது உறவினராக இருப்பதனால்தான் என்னால் பத்து வருடங்களாக நீடிக்க முடிந்திருக்கிறது. விஜய் எனக்கு மிகப்பெரிய வலிமையாகவும் உத்வேகமாகவும் இருக்கிறார். அவர் பெரிய நடிகராக இருந்தபோதும், எப்போதும் அடக்கத்துடனே இருக்கிறார்' என்று கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X