2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தாய்வீடு நாடும் மாஸ் ஹீரோயின்

George   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழும் தெலுங்கும் வாரிவாரிக் கொடுத்து ராணியாக அமரவைத்து அழகு பார்த்தாலும் பிறந்தவீட்டு பாசம் இல்லாமல் போய் விடுமா? நயன்தாரா மலையாளத்தில் தற்போது 'பாஸ்கர் தி ராஸ்கல்;' என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளமைகூட அப்படித்தானாம்.

சித்திக் இயக்கிவரும் இந்த திரைப்படத்தில் மெகாஸ்டார் மம்முட்டி தான் ஹீரோ. மம்முட்டி திரைப்படம் என்பதுடன், மீண்டும் தாய்மொழியில் நடிக்கப்போகிறோம் அதுவும் சித்திக் இயக்கத்தில் என்கிற சந்தோஷமும் சேர்ந்துகொண்டதால், எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே சம்மதித்தார் நயன்தாரா. 

இந்த திரைப்படம் முடிவடைந்து இன்னும் நான்கு நாட்களில் வெளியிடப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் மலையாளத்தில் நயன்தாரா கவனம் செலுத்துவாரா என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. 

நயன்தாரா மலையாளத்தில் நடிக்க விரும்புவது தன்னை வித்தியாசப்படுத்தி காட்டும் கதாப்பாத்திரங்களில்; தான். அப்படி கதாப்பாத்திரங்கள் அமைந்தால் நடிப்பதற்கு தடை இல்லை என்கிற நயன்தாரா, தற்போது தமிழில் நிறைய திரைப்படங்களை ஒப்புக்கொண்டுள்ளதால், அடுத்த மலையாளப்படம் நடிப்பதற்கு இன்னும் கொஞ்ச காலம் எடுத்துக்கொள்வார் என்றே தெரிகிறது.

அதுதவிர, சம்பள வித்தியாசமும் நயன்தாராவை யோசிக்க வைக்கிறதாம். தமிழில் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா, மலையாளத்தில் வெறும் 50 இலட்ச ரூபாய் மட்டுமே தான் வாங்கிக்கொண்டு நடிக்கிறார். 

காரணம், மலையாள திரையுலக நிலைமையும்;, வியாபார எல்லைகளும்; அப்படி. அதையும் தாண்டி அவர் மலையாளத்தில் நடிக்கவேண்டும் என்றால் நல்ல கதை இருந்தால் தான் சாத்தியம் என்கிறார்கள் நயன்தாராவைப்பற்றி நன்கு அறிந்தவர்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X