2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கோடிகளில் புரளும் நயன்

George   / 2015 ஏப்ரல் 06 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை நயன்தாராவின் சம்பளம் 2 கோடி இந்திய ரூபாய்களை தாண்டியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து குவியும் திரைப்பட வாய்ப்புகளால் நயனின் சம்பளம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நயன்தாரா 2004ஆம் ஆண்டு 'ஐயா' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ரஜினி, சரத்குமார், விஜய், அஜீத், சூர்யா, விஷால், ஆர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படவுலகில் முன்னணி நடிகையாக தொடர்ந்து வலம் வருகிறார். 

காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது அவரது மார்க்கெட் சரிந்து விடும் என பேச்சு கிளம்பியது. ஆனால் இரண்டாவது சுற்று ஆரம்பமானபோதும் கலக்கினார். தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு ஒப்பந்தம் செய்தனர். திரைப்படங்கள் குவிந்தது. தமிழ் திரைப்படவுலகில் தொடர்ந்து நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார். 

தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக 'மாஸ்', சிம்புவுக்கு ஜோடியாக 'இது நம்ம ஆளு', ஜெயம் ரவியுடன் 'தனி ஒருவன்', விஜய் சேதுபதியுடன் 'நானும் ரவுடிதான்' திரைப்படங்களில் நடிக்கிறார். 'மாயா' என்ற பேய் திரைப்படத்திலும் நடிக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக 'பாஸ்கர் த ராஸ்கல்' திரைப்படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். 

உதயநிதிக்கு ஜோடியாக நடித்த 'நண்பேன்டா' திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. திரைப்படங்கள் குவிவதால் நயன்தாராவின் சம்பளம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. நயன்தாரா தற்போது 2 கோடியே 30 இலட்சம் இந்திய ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .