2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அஷ்மிதாவின் குத்தாட்ட முயற்சி

George   / 2015 மே 04 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்காரா போட்டு நடிகர்களை மயக்கிய நடிகை அஷ்மிதா தற்போது பொலிவூட்டிலும் மிகப்பெரிய குத்துப்பாட்டு நடிகையாக வேண்டும் என்றும் தீவிர முயற்சி எடுத்து வருகிறாராம்.

வில்லன், சாமிபுள்ள உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர் அஷ்மிதா. இதில் இவர் நாயகியாக நடித்த திரைப்படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் திரைப்படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே -என்ற பாடலில் குத்தாட்ட நடிகையாக அதிரடி ஆட்டம் போட்டார். 

அந்த பாடல் சூப்பர் ஹிட்டானதால் அஷ்மிதாவின் குத்தாட்டத்துக்கு மார்க்கெட் எகிறி நிற்கிறது. அதையடுத்து இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் சூப்பர் ஆட்டம் போட்டு விட்டு வந்திருக்கும் அஷ்மிதா, தற்போது விழித்திரு திரைப்படத்தில் டி.ராஜேந்தர் குத்தாட்டம் போடும் பரப்பரபாம் என்ற பாடலில் அவருடன் இணைந்து செம ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

சென்னையிலுள்ள டி.ஆர் கார்டனில் இந்த பாடல் இரண்டு நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் மொத்த பாடலும் காட்சிப்படுத்தப்படாத நிலையில் மேலும் இரண்டு நாட்கள் அந்த பாடல் காட்சிப்படுத்தப்படுத்தவுள்ளனர். இந்த பாடலில் மஸ்காரா பாடலை விடவும் செக்ஸியான மூவ்மெண்டுகளை கொடுத்து ஆடி வரும் அஷ்மிதா, இதன்பிறகு பொலிவூட்டிலும் மிகப்பெரிய குத்துப்பாட்டு நடிகையாக வேண்டும் என்றும் தீவிர முயற்சி எடுத்து வருகிறாராம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X