2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹிட்டாகும் விஜய் - ஹன்ஸி செல்ஃபி

George   / 2015 மே 17 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய்யும் நடிகை ஹன்சிகாவும், இணைந்து எடுத்த செல்ஃபி தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'புலி' திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர். 

சுமார் 150 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அண்மையில் தாய்லாந்தில் உள்ள புலி கோவில் நிறைவடைந்தது.

தாய்லாந்தில் உள்ள புலி கோவிலில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு ஹன்சிகாவும், விஜய்யும் இணைந்து செல்ஃபி ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர். 

இந்த புகைப்படத்தை ஹன்சிகா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், புலி படக்குழுவுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செல்ஃபி, தற்போது டுவிட்டர், பேஸ்புக் இணையதளங்களின் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X