2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புலியுடன் மோத விரும்பாத பாயும்புலி

George   / 2015 மே 19 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் புலி. இத்திரைப்படத்தின் அனைத்து கட்டப் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இத்திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது, அது செப்டெம்பர் 19ஆம் திகதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் பாயும்புலி திரைப்படத்தையும் அதே விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், இப்போது விஜயின் புலி வெளியாகயிருப்பதை அறிந்து, பாயும் புலி வெளியீட்டு திகதியை மாற்றி விட்டார்களாம்.

அதாவது, விஜய் திரைப்படம் வெளியாகயிருந்த தீபாவளி அன்று விஷாலின் பாயும்புலி வெளியாகிறதாம். ஒரேநாளில் விஜய் திரைப்படத்துடன் மோதுவது பிரச்சினையில்லை. அதனால் தனது திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே பின்வாங்கியிருக்கிறாராம் விஷால்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X