2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திருமணமா? எனக்கா? ஐயோ...! வெட்கத்தில் சிவக்கும் நயன்

George   / 2015 மே 19 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை நயன்தாராவுக்கும் 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் இயக்குநர்  விக்னேஷ் சிவனுக்கும் இடையில் இரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, இது தொடர்பில் அவ்விருவரும் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர். தன்மீதாக கிசு கிசு தொடர்பில் நயன்தாராவே முன்வந்து பதிலளித்திருப்பதே இதில் ஆச்சியமானதாகும். 

காதல் தொடர்பான கேள்விகளுக்கு எப்போதும் நயன்தாரா பதிலளிக்க விரும்பமாட்டார். அதிலும் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடர்பான காதல் செய்திகள் வெளிவந்த நாள் முதல் அமைதி காத்த நயன்தாரா, இப்போது இரகசியம் திருமணம் தொடர்பான செய்திக்கு உடனே பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அளித்த ஒரு பேட்டியொன்றில், 'திருமண வதந்தியா? கண்டிப்பாக இது உண்மை இல்லை. படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறேன். அதுதான் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது.

ஆதாரமில்லாத செய்தியைப் பரப்பும் ஊடகங்கள் கொஞ்சம் இளைப்பாறிக்கொள்ளலாம். ஒரு பெண்ணுக்குத் திருமணம் என்பது பெரிய விடயம். அது நடக்கும்போது நிச்சயம் உலகத்துக்கு அறிவிப்பேன். அவசர அவசரமாக என் திருமணம் ஒருபோதும் நடக்காது' என்று கூறியுள்ளார் நயன்தாரா. இது தொடர்பில் விக்னேஷ் சிவனும் தன்பக்க விளக்கத்தை ட்விட்டர் வலையமைப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X